Breaking News

கொடிய விஷமுடைய பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு ரீல்ஸ் எடுத்த பாம்பு பிடி வீரர் கடித்து மரணம் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

கொடிய விஷமுடைய பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு ரீல்ஸ் எடுத்த பாம்பு பிடி வீரர் கடித்து மரணம் வைரல் வீடியோ

மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் மஹாவர், வயது 42, என்பவர் பாம்பு பிடிக்கும் வேலையை செய்து வந்தார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் பர்பத்புரா கிராமத்தில் பாம்பு பிடிக்க அழைப்பு வந்தது. அங்கு சென்று பாம்பை பிடித்த அவர் பாம்பை தனது கழுத்தில் சுத்தியபடி பள்ளியில் இருந்து மகனை அழைக்க பள்ளி அருகே சென்றுள்ளார். 

அப்போது, அவரை பார்த்தவர்கள் தங்களின் செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். அவரும் பாம்பை சீண்டி சீண்டி வீடியோவுக்கு பந்தாவாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன பாம்பு அவரது கையில் கொத்தி விட்டது. அதை எதிர்பாராத மஹாவருக்கு உடனே விஷம் உடல் முழுவதும் பரவ அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து விட்டார். 

உடனடியாக அவரை மீட்ட அப்பகுதி மக்கள் அவரைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி தீபக் மஹாவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்த நிலையில் தீபக் மஹாவர், விஷப்பாம்பைக் கழுத்தில் போட்டுக்கொண்டு சுற்றிய ரீல்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது. விஷப்பாம்புடன் விபரீதமாக விளையாடி பாம்பு பிடி வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-

https://x.com/adminmedia1/status/1946499023327903865

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback