Breaking News

பாஜக பிடியில் அதிமுக சிக்கியுள்ளது, ஸ்டாலினே மீண்டும் ஆட்சி அமைப்பார்..! திமுகவில் இணைந்த அன்வர் ராஜா பேட்டி

அட்மின் மீடியா
0

அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம் பியுமான அன்வர் ராஜா, ஆரம்பத்தில் இருந்தே அதிமுக - பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருந்து வந்தார்


ராமநாதபுரத்தை சேர்ந்த அன்வர் ராஜா அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். ஏற்கனவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்த போதும் அக்காட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த அன்வர் ராஜா, சி ஏ ஏ சட்ட திருத்தத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தபோதும், நாடாளுமன்றத்தில் எதிர்த்து பேசி இருந்தார். 

இந்த நிலையில், அண்மையில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த போது, தமிழ்நாட்டில் ஒருபோதும் பாஜக கால் ஊன்ற முடியாது என அவர் தெரிவித்திருந்தார். அவரது பேட்டி அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேறிய அன்வர் ராஜா, இன்று தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்

பாஜக உடனான கூட்டணி தொடர்பாக தனது ஆதங்கத்தை பலமுறை தெரிவித்தும் அதிமுக கண்டுகொள்ளவில்லை என்ற குற்றம் சாட்டிய அவர், பலமுறை என் ஆதங்கத்தை கூறியும் அவர்கள் கேட்கவில்லை என்றும் அடுத்த சாய்ஸ் திமுக தான்., அதனால் இணைந்துள்ளதாகவும் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

பேரறிஞர் அண்ணா தலைமையில் கருத்தியல்ரீதியாக வளர்ந்தவர்கள் நாங்கள். பாஜகவின் கையில் அதிமுக சிக்கியிருக்கிறது. அதிமுக தனது கொள்கைகளுக்கு மாறாக செயல்படுகிறது. அதிமுகவை அழிப்பதுதான் பாஜகவின் நோக்கம்.

அதிமுகவை சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள், தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவுடன் நெகட்டிவ் சக்தி, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ,தனது கொள்கையிலிருந்து தடம் புரண்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாகவும் 

முதலமைச்சர் வேட்பாளர் என எடப்பாடி பழனிச்சாமியை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை என்றும் மூன்று முறை கூட்டணி குறித்து பேட்டி அளித்த அமித் ஷா, இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவில்லை, எந்த கட்சியில் இணைந்தாலும் அக்கட்சியை சீரழிப்பது தான் பாஜகவின் வேலை என்றும் கூட்டணி ஆட்சி என அமித் ஷா பலமுறை கூறியும் முதல்வர் வேட்பாளர் நான்தான் என இபிஎஸ்- ஆல் கூற முடியவில்லை.

ஒரு தலைவரை நம்பி தான் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றும் மு.க ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்றும் கூறினார். 

அதிமுகவில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை என்றும் இனி நிலையான தலைவர்கள் வருவார்களா என தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback