காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு திருச்சி சிவா மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகை காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுவதும் காமராஜர் கண்டனம் கூட்டம் நடத்தினார்.
காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்குகிற அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய கலைஞர் உத்தரவிட்டார்.
கலைஞரின் பெருந்தன்மையை பார்த்து நெகிழ்ந்து போன காமராஜர், உயிர் போவதற்கு முன்பு, அப்போதைய தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜன நாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்
- திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவா சர்ச்சை பேச்சு.
காங்கிரஸ் கட்சி அறிக்கை
பெருந்தலைவர் மனித கடவுள் காமராஜர் அவர்களைப் பற்றி தவறான செய்தியை பரப்பிய மாநிலங்களவை உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைச் செயலாளருமான திரு திருச்சி சிவா உடனடியாக பெருந்தலைவர் காமராஜரை பற்றி அவதூறான கருத்தை பரப்பியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஏனென்றால் காமராஜர் ஆட்சி என்றால் பொற்கால ஆட்சி அவர் காலத்திற்கு பின்பு அது போன்ற ஒரு ஆட்சியை தமிழக மக்கள் கண்டதில்லை காரணம் மக்களுக்காக வாழ்ந்த மனிதர் தன் மக்கள் ரேஷன் அரிசி சாப்பிட்டதால் அதையே தானும் உண்ட மனிதர் மக்களுக்காகவே வாழ்ந்தவர்
அவரைப் பற்றி தவறாக கலைஞர் சொன்னார் என்று இறந்து போனவர்களையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் திருச்சி சிவா தனது பேச்சில் காமராஜருக்காக ஏசி அறையை தமிழக பயணியர் விடுதியில் ஏசி பொருத்தப்பட்டதாக தவறான தகவலை உண்மைக்கு புறமான செய்தியை முன்னாள் முதல்வர் கலைஞர் இவரிடம் சொல்லியதாக சொல்லியிருக்கிறார்
எனவே உடனடியாக தனது செயலுக்கு நாளை(17-07-25) காலை 8-00 மணிக்குள் காங்கிரஸ் தொண்டர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால்
நாளை (17-07-25)காலை 10-00 மணிக்கு திருச்சி சிவா வீடு முற்றுகையிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் அவரது இந்த செயலுக்கு காமராஜர் தொண்டர்களின் சார்பாகவும் எனது சார்பாகவும் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.