Breaking News

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அட்மின் மீடியா
0

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபயிற்சி சென்றபோது ஏற்பட்ட திடீர் தலைச்சுற்றல் காரணமாக  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஜூலை 21ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் , 3 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்பேரில்  மருத்துவமனையில் இருந்தவாறே  அரசு அலுவல் பணிகளையும்  மேற்கொண்டு வந்தார்.   உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்தும், அதுதொடர்பான பணிகள் குறுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.  இருப்பினும் ஜூலை 24ம் தேதி முதலமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனையில் (கிரீம்ஸ் சாலை) மருத்துவர் செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று மாலை இல்லம் திரும்ப உள்ளார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நலமாக இருக்கின்றார்கள். மூன்று நாள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback