Breaking News

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் முன் தெரிந்து கொள்ளவேண்டியவை - தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் முன் தெரிந்து கொள்ளவேண்டியவை - தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு


இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம்

எழிலகம் இணைப்பு கட்டிடம், 4வது தளம், சேப்பாக்கம், சென்னை -05.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் முன் அறிந்திருக்க வேண்டியவை

செய்யவேண்டியவை

எப்பொழுதும் eMigrate வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள் வாயிலாக மட்டுமே வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டும்.

வெளிநாட்டில் வேலை செய்ய போகும் நிறுவனம் / முதலாளி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

வேலைக்கான ஒப்பந்தம், சட்டப்படியான ஆவணங்கள் மற்றும் வேலைக்கான விசா உடன் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும்.

வேலைக்கான ஒப்பந்தத்தை எப்பொழுதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். அதில் தான் வேலைக்கு செல்பவரின் உரிமைகள். பொறுப்புகள்.ஊதியம். வேலையின்தன்மை போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவை மட்டுமே தங்களுக்கு வெளிநாட்டில் வழங்கப்படும்.

வேலை செய்யும் நாட்டின் சட்ட திட்டங்களே அனைவருக்கும் பொருந்தும் : அந்நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் கலாச்சாரங்களை மதித்து நடக்க வேண்டும்

வெளிநாடுகளில் பணிபுரியும் இடங்களிலிருந்து வெளிச்செல் விசா (Exit Permit) பெற்றிடாமல் நாடு திரும்ப இயலாது.

ஒப்பந்த காலத்தில் பணிபுரியும் நிறுவனம் / முதலாளி தவிர வேறு நிறுவனம் /முதலாளியிடம் வேலைக்கு செல்வதில் வரையறைகள் உள்ளன என்பதை அறிந்திருக்க வேண்டும்.

செய்யகூடாதவை

* பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வெளிநாடு செல்லக்கூடாது.

* வாய் மொழி வாக்குறுதிகளை நம்பி செல்ல கூடாது. முறையான ஆவணங்கள் பெற்றே செல்ல வேண்டும்.

* சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்ல கூடாது. அவ்வாறு செல்லுதல் வெளிநாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாகும்.

* குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் வேலை செய்யும் நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ அதற்கான குற்ற வழக்கு தொடரப்படும் என்பதனை அறியவும்.

* கண்டிப்பாக மது வகைகள், மத சின்னங்கள். போதை பொருட்கள் முதலிய தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக் கூடாது.

* போதை பொருட்கள், மது வகைகள், திருட்டு, கொள்ளை, ஆபாச மொழிகள் மற்றும் காட்சிகள் போன்றவற்றை பயன்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை கிடைத்திட வாய்ப்புள்ளது.

* போராட்டம் அல்லது வேலை கடத்தப்படுவதற்கு / சிறை செல்வதற்கு நேரிடும். நிறுத்தம் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் நாடு

* உள்ளுர் அலுவலர்களின் முறையான அனுமதியின்றி வேறு நிறுவனத்திலோ, முதலாளியிடலோ வேலைக்கு செல்லக்கூடாது. வாய் மொழியான உத்தரவாதங்களை தவிர்த்து, முறையான ஆவணங்களை வலியுறுத்துங்கள்.

போலி முகவர்கள் மூலம் வெளிநாடு செல்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

பாலைவனத்தில் ஆடு / ஒட்டகம் மேய்க்க கட்டாயப்படுத்துதல்.

40, 50 அறைகள் கொண்ட வீடுகளுக்கு பணிப்பெண்ணாக வேலை செய்ய கட்டாயப்படுத்துதல்

கழிவறைகளை சுத்தம் செய்தல்

ஓய்வு நேரம் இல்லாமல் வேலைச் செய்யக் கட்டாயப்படுத்துதல்

கைப்பேசியை பறித்துக்கொண்டு. குடும்பத்தினரை தொடர்பு கொள்ள விடாமல் செய்தல்

வேலையில் தவறு செய்யும் போது / உடல் நலக்குறைவால் ஓய்வு கேட்கும்போது கடுமையாக தாக்கப்படுதல்

ஊதியம் ஏதும் வழங்கப்படாமல். கடவுச்சீட்டினை (Passport) பறித்து கொண்டு பல வருடங்களாக தாயகம் அனுப்பாமல் கொத்தடிமைகளாக வேலை செய்யக் கட்டாயப்படுத்துதல்

சில நேர்வுகளில், வீட்டு வேலைக்குச் சென்ற பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு உள்ளாகுதல்

சுற்றுலா விசாவில் சென்றதால் விசா முடிந்த பின் அந்நாட்டில் அபராதம் விதிக்கப்படுதல் மற்றும் சிறை தண்டனை அனுபவித்தல்.

வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு & வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான ஆசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய தொடர்பு கொள்ளவும்.

தமிழ்நாடு அரசின் 24/7 கட்டணமில்லா உதவி மையம்.

இந்தியாவிற்குள்

1800 309 3793

வெளிநாடுகளிலிருந்து

Missed Call

0 80 6900 9900

தொடர்புக்கு

0 80 6900 9901

மின்னஞ்சல்

nrtchennai@gmail.com/nrtchennai@tn.gov.in

வலைத்தளம்

https://nrtamils.tn.gov.in/

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2025/07/17522385651559.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback