Breaking News

கடலோர ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் இளைஞர்களுக்கு  காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..


கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் மீனவ இளைஞர்கள் ஆண்களுக்கான 42 காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவேண்டியுள்ளது. ஊர்க்காவல் படையில் சேரவிரும்புகிறவர்களிடமிருந்து உரிய படிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து 21.07.2025 மற்றும் 22.07.2025 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் படிவங்களைப் பெற்று அவற்றை பூர்த்தி செய்து, காவல் கண்காணிப்பாளர், கன்னியாகுமரி மாவட்டம் என முகவரியிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில் 28.07.2025-ம் தேதிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

விண்ணப்பதாரர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவராகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

மேலும் 28.07.2025-ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback