மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் - எஸ்.பி. அதிரடி உத்தரவு.
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் - எஸ்.பி. அதிரடி உத்தரவு.
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறைடிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்-உயர் அதிகாரிகள் மீது பல்வேறு புகார் தெரிவித்த சுந்தரேசன், மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி கூறி இருந்த நிலையில் நடவடிக்கை
மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பி ஆக இருந்த சுந்தரேசன் தனக்கு வழங்கப்பட்டிருந்த அலுவலக வாகனம் திரும்ப பெறப்பட்டு விட்டதால், அவரது வீட்டில் இருந்து டிஎஸ்பி அலுவலகத்திற்கு நேற்று நடந்து சென்ற வீடியோ ஊடகங்களில் பரவியது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் திரும்ப பெறப்படவில்லை, அலுவல் பணி காரணமாக அவரிடம் இருந்து வாங்கிய வாகனத்தை மீண்டும் திரும்ப வழங்கி விட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து டிஎஸ்பி சுந்தரேசன் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னையில் இருந்து உயர் அதிகாரிகளின் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது மாவட்ட காவல்துறை அழுத்தம் தருவதாக தனது குமுறலை வெளிப்படுத்திருந்தார்.
இந்நிலையில் தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் இன்று காலை முதல் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.விசாரணையின் முடிவில் டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய அவர் திருச்சி சரக ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்தநிலையில், அவரை இன்று (ஜூலை 18) சஸ்பெண்ட் செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்