ஏமனில் உள்ள நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து! முழு விவரம்
அட்மின் மீடியா
0
ஏமனில் உள்ள நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து! முழு விவரம் The death sentence of Indian nurse Nimisha Priya in Yemen has been officially revoked, bringing a major relief to her family and supporters who have been fighting for her release
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் இந்தியா அழைத்து வரப்படுவார் என்று பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்திய Global Peace Initiative அமைப்பின் தலைவர் டாக்டர் கே.ஏ. பால் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது 38). இவர் ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014-ல் உள்நாட்டு போரால், அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். ஆனால், நிமிஷா பிரியாவால் உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை.
2015-ம் ஆண்டில் தலால் அப்தூ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சனா நகரில் கிளினிக் ஒன்றை பிரியா நடத்த தொடங்கினார். அந்நாட்டின் குடிமக்களே கிளினிக் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நடத்த அனுமதி உண்டு.
ஆனால், கிளினிக்கை ஆரம்பித்ததும் மஹ்தி, அனைத்து வருவாயையும் தனக்கு தரும்படி பிரியாவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினார். இதுபற்றி ஏனென்று கேட்டதற்கு, மஹ்தி மோதல் போக்கில் ஈடுபட்டு உள்ளான்.
இதன்பின்னர், போலியான ஆவணங்களை கொண்டு, தன்னை பிரியா திருமணம் செய்து கொண்டார் என மோசடியில் ஈடுபட்டதுடன், மிரட்டல் விடுத்தும், சித்ரவதை செய்தும் வந்துள்ளான்.
இந்த விவகாரத்தில் போலீசுக்கு போன நிமிஷாவுக்கு அநீதியே பரிசாக கிடைத்துள்ளது. போலீசார் பிரியாவை 6 நாட்கள் சிறையில் அடைத்தனர். சிறை கைதியாக இருந்து வெளிவந்த பின்னர் மஹ்தியின் கொடுமை அதிகரித்தது.
2017-ம் ஆண்டு ஜூலையில், கிளினிக் அருகே இருந்த சிறையின் வார்டனிடம் பிரியா, உதவி கேட்டுள்ளார். அதற்கு அவர், அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, பாஸ்போர்ட்டை திரும்ப கொடுக்கும்படி கேட்க யோசனை கூறியுள்ளார். ஆனால், மயக்க மருந்து செலுத்தப்பட்ட மஹ்திக்கு அதனை ஏற்று கொள்ளும் அளவுக்கு உடல்நிலை இல்லாத சூழலில் மரணம் அடைந்ததில், பிரியா வழக்கில் சிக்கினார்.
இதில், அவருக்கு விசாரணை நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவருடைய மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது. வழக்கில், அவருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
தள்ளிவைப்பு:-
ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா ப்ரியாவின் மரணதண்டனை ஒத்திவைக்கப்படுவதை உறுதி செய்ததில் பிரபல முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஷேக் அபுபக்கர் அகமது என்று அதிகாரப்பூர்வமாக அறியப்படும் இவர், 'இந்தியாவின் கிராண்ட் முஃப்தி ' என்று மதிக்கப்படும் 94 வயதான இஸ்லாமிய மதகுரு.
2017 ஆம் ஆண்டில் நிமிஷா கொன்றதாகக் கூறப்படும் ஏமன் நாட்டவரான தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த ஏமனில் உள்ள மத அதிகாரிகளுடன் அபுபக்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த கொலையில் நிமிஷாவின் பங்கு இருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டு, ஜூலை 16 ஆம் தேதி அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. முப்தி தலையிட்டதால் நிமிஷா பிரியாவின் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.
மரணதண்டனை ரத்து:-
இந்நிலையில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் இந்தியா அழைத்து வரப்படுவார் என்று பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்திய Global Peace Initiative அமைப்பின் தலைவர் டாக்டர் கே.ஏ. பால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "கடந்த பத்து நாட்களாக இரவு பகலாக அயராது உழைத்து, தலைவர்கள் இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர முயன்றனர். நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய உதவிய தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. இது ஒரு பெரிய வெற்றி. இதை அடையக் காரணமாக இருந்த அனைத்துத் தலைவர்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்
கடவுளின் அருளால், அவர் விடுவிக்கப்பட்டு இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார். தூதர்களை அனுப்பி நிமிஷாவை பத்திரமாக இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்தமைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.