Breaking News

தூத்துக்குடி அருகே ஆணவக்கொலை - தங்கையை காதலித்த ஜடி ஊழியரை வெட்டி கொலை செய்த அண்ணன்

அட்மின் மீடியா
0


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகமங்கலத்தை சார்ந்த மென்பொறியாளர் கவின்குமார் அவர்கள் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.


 வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்த கவின்குமாரும் சுபாசினி என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

சில மாதங்களுக்கு முன்னர் இதனையறிந்த சுபாசினியின் பெற்றோர் கவின்குமாரையும் அவரது பெற்றோரையும் எச்சரித்துள்ளனர்.  

அதனால் கவின்குமாரின் பெற்றோர் கவின்குமாரை கண்டித்துள்ளனர். 

இந்நிலையில் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கவின்குமார் விபத்தில் சிக்கி திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தனது தாத்தாவை பார்ப்பதற்காக ஊருக்கு சென்றுள்ளார். 

அப்போது திருநெல்வேலியில்  சித்த மருத்துவராக தான் பணியாற்றும் தனியார் சிகிச்சை மையத்தில் கவின்குமாரின் தாத்தாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என சுபாஷினி தெரிவித்ததன் அடிப்படையில் சுபாஷினியிடம் ஆலோசனை பெறுவதற்கு கவின்குமார் அவரது அம்மா மற்றும் மாமா ஆகிய மூவரும் சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளனர். 


சிகிச்சை மையத்தின் உள்ளே சுபாஷினியிடம் கவின்குமாரின் அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருந்தபோது வெளியே நின்று கொண்டிருந்த கவின்குமாரை சுபாஷினியின் தம்பி சுர்ஜித் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று தனது வீட்டு வாசலில் வைத்து கவின்குமாரை வெட்டி படுகொலை செய்து காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளான்

இதனையடுத்து சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக போலீஸ் தம்பதியான சரவணன்- கிருஷ்ணகுமார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவின்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback