தமிழ்நாட்டில் மத வழிபாட்டுத் தலங்களில் மின் கட்டணத்தில் பாகுபாடு என பரவும் வதந்தி ! உண்மை என்ன
தமிழ்நாட்டில் மத வழிபாட்டுத் தலங்களில் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று பரப்பப்படும் வதந்தி !
சமூக வலைதளங்களில் பரவும் செய்தி:-
சாதாரண குடிமகனின் மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.85.**மசூதி யூனிட்டுக்கு ரூ.1.85**கிறிஸ்துவ சர்ச்சுக்கு ரூ.1.85**கோயிலுக்கு ரூ.7.85**கோசாலை பசு மடம் ரூ.7.85*#மதசார்பற்றதமிழகம்?மசூதி தனியார் சொத்து!முல்லா மௌல்விகளுக்கு அரசு ஏன் சம்பளம் கொடுக்கிறது?**சர்ச் தனியார் சொத்து!கிறிஸ்துவ மத பாதிரிகளுக்கு அரசு ஏன் சம்பளம் தருகிறது?**கோயில் அரசு நிர்வாகம்!ஏன் அர்ச்சகருக்கு, பூசாரிக்குஅரசு சம்பளம் கொடுப்பதில்லை?
உண்மை என்ன:-
இது குறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
மத வழிபாட்டுத் தலங்கள் மின் கட்டணத்தில் பாகுபாடு என்று பரப்பப்படும் வதந்தி !
இந்த வதந்தி கடந்த 2019ம் ஆண்டில் இருந்தே பரப்பப்படுகிறது.
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்தும் ' Places of Public Worship' என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணமே நிர்ணயிக்கப்படுகிறது.
2024ம் ஆண்டு கட்டண விதிப்பின்படி, கோயில், மசூதி மற்றும் சர்ச் உள்ளிட்ட பொது வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 6.20 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் 120 யூனிட்டுக்கு அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு 3.13 ரூபாய் மானியம் அளிக்கிறது.வதந்தியைப் பரப்பாதீர் !
அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/tn_factcheck/status/1948604836473442796
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
