Breaking News

கிராம ஊராட்சிகளில் அனுமதி இல்லா கட்டடங்களை சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

அட்மின் மீடியா
0
கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதுதொடர்பாக  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கடிதம்  எழுந்தியுள்ளது.  அதில், ““கிராம ஊராட்சி நிர்வாக அலுவலரின் அனுமதி இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டட வரைபட அனுமதிச் சான்றினை கோரி அறிவிப்பினை வழங்க வேண்டும்.

அனுமதி இன்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாக அள ஆய்வு செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடம் தொடர்ந்து கட்டப்பட்டுக் கொண்டிருந்தால் அதை பூட்டி முத்திரை இடும் அதிகாரம் ஊராட்சிகளின் நிர்வாக அலுவலருக்கு உண்டு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback