Breaking News

கோவில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு, அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் - எடப்பாடி பழனிச்சாமி

அட்மின் மீடியா
0

கோவில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு, அரசு சார்பில் வீடு கட்டித்தரப்படும் - எடப்பாடி பழனிச்சாமி



தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர், ஓரத்தநாடு பகுதி விவசாய தொழில் நிறைந்த தொகுதி. கண்ணை இமை காப்பது போல, விவசாயிகளை அதிமுக காப்பாற்றும். விவசாய தொழிலாளிகளின் கஷ்டத்தை நான் நன்கு அறிவேன்.

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால், கோயில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு, நிலத்தை சொந்தமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலம் தந்து, அரசு சார்பில் வீடும் கட்டித்தரப்படும்” என்று அறிவித்துள்ளார்.

முன்னதாக கோவில் பணத்தில் இருந்து அரசு கல்லூரிகள் கட்டுவது தவறு என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback