பீகாரில் பரோலில் வந்த கைதியை மருத்துவமனையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை! அதிர்ச்சி சிசிடிவி வீடியோ...
பீகாரில் பரோலில் வந்த கைதியை மருத்துவமனையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை! அதிர்ச்சி சிசிடிவி வீடியோ...
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவின் பராஸ் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீரென உள்ளே புகுந்தது. நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதியை சுட்டு விட்டு தப்பிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இந்தசம்பவத்தில், 5 பேர் துப்பாக்கிகளை இடுப்பில் மறைத்து வைத்தபடி மருத்துவமனையின் உள்ளே நுழையும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
திரைப்பட காட்சிகளை போல் அவர்கள் 5 பேரும் துப்பாக்கிகளை எடுத்து, நோயாளி சிகிச்சை பெறும் ஐ.சி.யூ. அறைக்கதவை திறந்து, உள்ளே செல்கின்றனர். சிகிச்சையில் இருந்த சந்தன் மிஷ்ரா என்பவரை சுட்டு விட்டு கும்பலாக தப்பினர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/nirmalyadav484/status/1945762984904831126
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ