Breaking News

மெட்ரோ ரயிலில் புகையிலை பயன்படுத்த தடை- மீறினால் அபராதம்!

அட்மின் மீடியா
0

மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 

புகையிலை பொருட்களின் விளைவாக எச்சில் துப்புவதாலும், குப்பைகள் போடுவதாலும் தூய்மையையும் சுகாதாரத்தையும் பராமரிக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்துகின்றன.மெட்ரோ ரயில்புகையிலை பயன்பாடு உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், பொது இடங்களில் சுகாதாரமற்ற நிலையை உருவாக்கி விடுகிறது என CMRL தெரிவித்துள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback