கிருஷ்ணகிரியில் பயங்கரம்: 8-ம் வகுப்பு மாணவர் காரில் கடத்திக் கொலை நடந்தது என்ன முழு விவரம்
கிருஷ்ணகிரி: ஓசூரை அடுத்த அஞ்செட்டி அருகே நேற்று காரில் கடத்தப்பட்ட 8 ஆம் வகுப்பு மாணவன் கொல்லப்பட்ட நிலையில் மீட்பு
கிருஷ்ணகிரியில் பயங்கரம்: 8-ம் வகுப்பு மாணவர் காரில் கடத்திக் கொலை நடந்தது என்ன முழு விவரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித் (13). அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் மர்மநபர்களால் காரில் கடத்தப்பட்டுள்ளார்.இதுகுறித்து பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்சட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அஞ்செட்டியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் ரோகித் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
இங்குள்ள வனப்பகுதியில் கொண்டை ஊசி வளைவில் சாலை ஓரத்தில் சிறுவனின் சடலம் கிடைத்திருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அஞ்செட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
சிறுவனின் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர். விரைவில் கைது நடவடிக்கை தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அஞ்சடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
