Breaking News

சென்னையில் அதிர்ச்சி - மனைவியுடன் சண்டை 7 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை

அட்மின் மீடியா
0

சென்னையில் அதிர்ச்சி - மனைவியுடன் சண்டை 7 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை

7 வயது மகள் கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.சென்னை

சென்னையை அடுத்த ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு நேற்று பெண் ஒருவர் வந்த நிலையில், தனது தம்பியான சென்னை அயனாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38) என்பவர் அங்கு அறை எடுத்து தங்கியுள்ளதாகவும். அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த விடுதி மேலாளர் அறைக்கு சென்று பார்த்த போது, சதீஷ்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி இருந்தார் மேலும் அவருக்கு அருகில் அவரது குழந்தை ஸ்டெபி ரோஸ் (7) கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததும் தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போலீசார் உயிருக்கு போராடியசதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

குழந்தை ஸ்டெபி ரோஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரனையில் தற்கொலைக்கு முயன்ற சதீஷ்குமாருக்கும் ரெபேக்கா என்பவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

மேலும் கடந்த ஓராண்டாக கணவரை பிரிந்துள்ள ரெபேக்கா, தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். விவாகரத்து கோரியும், மகளை தன்னுடன் அனுப்ப கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

குழந்தையை ஒப்படைக்கும்படி கேட்டபோது, தரமறுத்த சதீஷ்குமார் தகராறு செய்ததோடு, ரெபேக்காவை தரக்குறைவாக திட்டியுள்ளார்.இதில், விரக்தியடைந்த ரெபேக்கா, குழந்தையை மீட்டு தரக்கோரி ஓட்டேரி காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.குழந்தையை தன்னிடமிருந்து பிரித்து விடுவர் என்று நினைத்த சதீஷ்குமார், மகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback