ஜூலை 7 ம் தேதி மொஹரம் பண்டிகையா? பள்ளி, அரசு அலுவலங்களுக்கு அரசு விடுமுறையா? தமிழக அரசு விளக்கம்
ஜூலை 7 ம் தேதி மொஹரம் பண்டிகையா? பள்ளி, அரசு அலுவலங்களுக்கு அரசு விடுமுறையா? தமிழக அரசு விளக்கம்
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7 ஆம் தேதியான வரும் திங்கள்கிழமை அன்று அரசு விடுமுறை என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இஸ்லாமிய மக்களின் புனித நாளான மொகரம் பண்டிகை ஜூலை 06 ஆம் தேதி ஞாயிற்று கிழமை கொண்டாடப்படுகிறது. என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சந்திரன் பிறை தென்படுவதை கணக்கிட்டு முகரம் பண்டிகை ஜூலை 07 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்ற தகவல் பரவியது
இந்நிலையில் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் மொஹரமை முன்னிட்டு ஜூலை 7 அன்று அரசு விடுமுறை என்று பரவும் தகவல் வதந்தி என தெரிவிக்கப்ட்டுள்ளது.
கடந்த 26-06-2025 அன்று மொஹரம் மாத பிறை காயல்பட்டினத்தில் காணப்பட்டது. ஆகையால் 27-06-2025 தேதி அன்று மொஹரம் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே யொமே ஷஹாதத் ஞாயிற்றுக்கிழமை 06-07-2025 ஆகும்.” என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 07-07-2025 திங்கட்கிழமை அரசு விடுமுறை இல்லை என்றும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள் FACT CHECK
