Breaking News

ரஷ்யாவில் இருந்து 50 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கிய விபத்து - விமானத்தில் பயணித்த 50 பேரும் உயிரிழப்பு

அட்மின் மீடியா
0

Tragedy in Russia’s Amur region — An Antonov An-24 aircraft carrying 49 people has crashed near Tynda. Wreckage located about 15 km from the city. Sadly, there are no signs of survivors 

ரஷ்ய-சீன எல்லையில் உள்ள பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரத்திலிருந்து டிண்டா நகரத்திற்குச் சென்ற அங்காரா AN-24 விமானம் விபத்துக்குள்ளானது



இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள், 6 பணியாளர்கள் என 50 பேருடன் புறப்பட்ட இந்த விமானம் ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் சென்றபோது ரேடாரில் இருந்து திடீரென மாயமானது.

மீட்பு ஹெலிகாப்டர்கள் உதவியுடன் விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில், டிண்டா நகரில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, அடர்ந்த மலைப்பகுதியில் புகை மூட்டம் எழுவதைக் கண்டது மீட்புக்குழு.

விமானம் எரிந்த நிலையில் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீட்புக்குழு, விமானம் முழுவதும் உருக்குலைந்ததால், பயணிகள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்தது. 

சைபீரியாவைச் சேர்ந்த அங்காரா நிறுவனத்தால் இயக்கப்படும் Antonov-24 என்ற பெயர் கொண்ட இந்த விமானம் விபத்தில் சிக்கிய காரணம் இன்னும் தெரியாத நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டு, உண்மையான காரணத்தைக் கண்டறியும் பணிகள் நடைபெறுகிறது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback