Breaking News

கொரோனா வழக்கு தப்லீக் ஜமாஅத்திற்கு எதிரான வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு பிறகு தள்ளுபடி முழு விவரம் Tablighi Jamaat covid case

அட்மின் மீடியா
0

கொரோனா வழக்கு தப்லீக் ஜமாஅத்திற்கு எதிரான வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு பிறகு தள்ளுபடி முழு விவரம்

கொரோனாவிற்கு முன் டெல்லி தப்லிக் ஜமாஅத் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு, ஊரடங்கு அறிவிப்பு செய்யப்பட்ட பின் அடைக்கலம் கொடுத்தார்கள் நோய் பரவலுக்கு துணை போனார்கள் என குற்றம் சாட்டப்பட்ட 70 பேரின் 16 FIR களில் உள்ள குற்றப்பத்திரிக்கைகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இவர்களில் ஒருவருக்கு கூட கொரோனா நோய் இருந்ததாக குற்றப்பத்திரிக்கையில் ஒரு வாக்கியம் கூட இல்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்!

அப்பாவி முஸ்லிம்களை சிறைப்படுத்துவதற்காக 5 ஆண்டுகள் அவர்களை அலைக்கழித்துள்ளது டெல்லி காவல்துறை.

வழக்கு விவரம்:-

கோவிட்-19 பரப்பியதாகத் தப்லீக் ஜமாஅத்துடன் தொடர்புடைய 70 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஐந்தாண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த வழக்குகளில் உள்ள 16 எஃப்.ஐ.ஆர்.களையும், குற்றப்பத்திரிகைகள் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (17) ரத்து செய்துள்ளது.

இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.இந்த மாநாடே பெரிய அளவிலான நோய்ப் பரவலுக்குக் காரணம் என்பதை நிரூபிக்க வலுவான அறிவியல் சான்றுகள் இல்லாததைக் காரணம் காட்டியே நீதிமன்றம் இந்த முடிவை எட்டியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) 2020 ஆம் ஆண்டின் தொடக்கக் கணக்கீடுகளின்படி, தப்லீக் ஜமாஅத் மாநாடு சில கோவிட் பாதிப்புகளுக்குக் காரணமான போதிலும், சமூகப் பரவலுடன் ஒப்பிடுகையில் அதன் பங்கு மிகைப்படுத்தப்பட்டது என்பதை நீதிமன்றமே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.

2020-இல் நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாடு கோவிட்டை முழுமையாகப் பரப்பியது என்று கூறி, சங்கப் பரிவாரங்களும், சங்கி மனநிலைகளைக் கொண்டவர்களும், ஊடகங்களும் எந்த அளவுக்கு வெறுப்பைப் பரப்பின என்பதை நாம் மறந்துவிடவில்லை.

News Source:-

https://indianexpress.com/article/cities/delhi/tablighi-jamaat-accused-charges-quashed-delhi-hc-covid-10132541/

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback