Breaking News

கள்ளகாதலுக்கு தடையாக இருந்த 4 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய் கைது

அட்மின் மீடியா
0

கள்ளகாதலுக்கு தடையாக இருந்த 4 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய் கைது



கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம் ஆகி தனது ஆண் குழந்தையுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனியே வாழ்ந்து வரும் தமிழரசி கட்டட வேலைக்கு சித்தாளாக சென்று வந்த நிலையில் அவருடன் கட்டட வேலை செய்து வரும் வசந்த் என்பவர் உடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மதியம் அவரது நான்கரை வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.இந்நிலையில் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அக்கம் பக்கத்தினரும், தமிழரசியின் உறவினர்களும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தமிழரசியை விசாரணை மேற்கொண்டனர்

அப்போது அவருடன் கட்டிட வேலை செய்து வரும் வசந்த் என்பவருடன் தமிழரசி சில மாதங்களாக முறையற்ற உறவில் இருந்து வருவது தெரியவந்தது. தனது காதலனுடனான உறவிற்கு குழந்தை இடைஞ்சலாக இருந்ததால் குழந்தையைத் தமிழரசியே கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. பெற்ற குழந்தையைத் தாயே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback