Breaking News

காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கி சூடு 37 போ் உயிரிழப்பு!

அட்மின் மீடியா
0

காசாவில் உணவு மற்றும் மனிதாபிமான உதவி பெற காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 30-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.இந்த சோகமான சம்பவம் காசா மனிதாபிமான அறக்கட்டளை விநியோக மையங்களுக்கு அருகே நிகழ்ந்துள்ளது.



இதன்மூலம் காசா போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,765 ஐ எட்டியுள்ளது. 1,40,485 பேர் காயமடைந்தனர்.

பாலஸ்தீனா்களுக்கு குறைந்தபட்ச நிவாரணப் பொருள்களை விநியோகிக்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.இருப்பினும், அத்தகைய நிவாரணப் பொருள்களின் விநியோக முகாம்களுக்கு வருவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதில் பலர் உயிரிழந்து வருகின்றனர். 

மற்ற அனைத்து வழிகளும் மூடப்பட்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் நடத்தப்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளை மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.

காசாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சில நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது சாப்பிடுகிறார்கள். சுத்தமான தண்ணீர் இல்லாமல் தொற்று நோய்கள் பரவி வேகமாக பரவி வருகின்றன.

இதற்கிடையே நேற்று, இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், காசாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை எழுதினர். அக்டோபர் 2023க்குப் பிறகு காசாவில் தேர்வுகள் நடதப்பட்டது இதுவே முதல் முறை. 1,500 மாணவர்கள் வரை தேர்வு எழுதியதாக தெரிகிறது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback