Breaking News

நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம் - 2 மருத்துவமனைகளின் கிட்னி அறுவை சிகிச்சைக்கான உரிமம் தற்காலிக நிறுத்தம்

அட்மின் மீடியா
0

நாமக்கல் கிட்னி விற்பனை விவகாரம் - 2 மருத்துவமனைகளின்கிட்னி அறுவை சிகிச்சைக்கான உரிமம் தற்காலிக நிறுத்தம்



தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, சிதார் மருத்துவனை ஆகிய மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சை உரிமம் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை

-மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை

பெரம்பலூர் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை செய்திகளில் வரப்பெற்ற முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.எஸ்.வினீத், இ.ஆ.ப., அவர்களை நியமித்து 18.07.2025 அன்று ஆணை வெளியிடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.எஸ்.வினீத், இ.ஆ.ப.,, மரு.இரா. ம. மீனாட்சிசுந்தரி, இணை இயக்குநர் (சட்டம்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை, மரு.A.ராஜ்மோகன், இணை இயக்குநர் நலப்பணிகள் நாமக்கல், மரு.கே. மாரிமுத்து, இணை இயக்குநர் நலப்பணிகள் மற்றும் அரியலூர் மாவட்டம், திரு.சீத்தாராமன், காவல் துணை கண்காணிப்பாளர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை ஆகியோர் அடங்கிய குழு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, பெரம்பலூர் மற்றும் சிதார் மருத்துவனை, திருச் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவான விசாரணை மேற்கொண்டனர். 

இவ்விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கையினை மரு.எஸ்.வினீத், இ.ஆ.ப, அவர்கள் அரசுக்கு அனுப்பியுள்ளார். 

அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, பெரம்பலூர் மற்றும் சிதார் மருத்துவனை, திருச்சி ஆகிய மருத்துவமனைகளுக்கு மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1994 பிரிவு 16 உட்பிரிவு (2) ன்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அவர்களால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback