Breaking News

மதுரையில் தவெக 2 வது மாநில மாநாடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0
மதுரையில் தவெக 2 வது மாநில மாநாடு

தவெகவின் 2வது மாநாடு மதுரையில் உள்ள கூடக்கோவில் பகுதியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 
 மதுரை கூடக்கோயிலில் 2 வது மாநில மாநாடு நடக்க உள்ளதாக அறிவித்துள்ளது

இது குறித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.

தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.

வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்.

வெற்றி நிச்சயம்.

நன்றி.


  முன்னதாக தவெகவின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது குறிப்பிடதக்கது

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback