2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் - தவெக செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்
2026 சட்டமன்றத் தேர்தலில்முதலமைச்சர் வேட்பாளர் விஜய் - தவெக செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இதில் தவெக செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1200 பேருக்கு மட்டுமே நுழைவு அடையாள அட்டை வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய விஜய், வீட்டிற்கு ஒருவரை தவெகவில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பாஜகவின் அரசின் செயலை தவெக ஏற்றுக் கொள்ளாது என தவெக செயற்குழுவில் தீர்மானம்
திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை; பாஜகவின் விஷமத்தனமான வேலைகள் தமிழ்நாட்டில் எடுபடாது மேலும் கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்
மண்டலம், 120 மாவட்டங்கள் ,12500 கிளைகழகங்களில் கட்சியின் கொள்கை விளக்க கூட்டத்தை நடத்தவும், ஜூலை இரண்டாம் வார இறுதியில் உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்க வேண்டும் என்றும், வீட்டிற்கு ஒருவர் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பேர் கட்சியை நிர்வாகியாக இருக்க வேண்டும் என்றும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தலில் பாஜக, திமுகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும். திமுக, பாஜகவுடன் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. கூடிக் குழைந்து கூட்டணிக்குப் போக நாங்கள் திமுகவோ, அதிமுகவோ இல்லை. தவெக எப்போதும் விவசாயிகளுடன் துணை நிற்கும்.
மக்களை மதரீதியாக பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் விஷமத்தனமான , பிளவுவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது.தந்தை பெரியார் அவமதித்தோ, அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ, எங்கள் மதிப்புமிக்க தலைவர்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றிபெற முடியாது. ” என்று தெரிவித்தார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
