Breaking News

சவுதியின் `தூங்கும் இளவரசர்' 20 ஆண்டுகளாக கோமாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மரணம் Saudi Arabia sleeping prince

அட்மின் மீடியா
0

சவுதியின் `தூங்கும் இளவரசர்' 20 ஆண்டுகளாக கோமாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மரணம் Saudi Arabia sleeping prince

சவுதியின் `தூங்கும் இளவரசர்' மரணம் தூங்கும் இளவரசர் என்று அழைக்கப்பட்டசவுதி இளவரசர் `அல்-வலீத் பின்காலித் பின் தலால்'(36) காலமானார் 2005ஆம் ஆண்டு லண்டனில் கார் விபத்தில் சிக்கி, 20 ஆண்டுகளாக கோமாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்த‌து

 சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால்

சவுதி அரேபியாவின் இளவரசர் முழுப் பெயர் அல்-வலீத் பின் காலித் பின் தலால், “தூங்கும் இளவரசர்” என அறியப்படுகிறார்.

இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இருப்பினும், தற்போதைய மன்னரின் நேரடி மகன் இல்லை. அதாவது இளவரசர் அல்-வலீத்தின் தாத்தா இளவரசர் தலால் பின் அப்துல்அஜிஸ் அல் சவூத் என்பவர் சவுதி நிறுவனரும் முதல் மன்னருமான அப்துல்அஜிஸ் அல் சவூதின் பல மகன்களில் ஒருவர். 

அதன்படி பார்த்தால் இளவரசர் அல்-வலீத் மன்னர் அப்துல்அஜிஸின் கொள்ளுப் பேரன். மறுபுறம் சவுதி அரேபியாவின் தற்போதைய மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவூத், சவுதி முதல் மன்னர் அப்துல்அஜிஸின் மகனும் ஆவார், அதாவது அவர் தூங்கும் இளவரசர் அல்-வலீத்தின் மாமா ஆவர்.

விபத்து:-

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் 2005 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்து வந்தபோது ஏற்பட்ட கார் விபத்தில், மூளையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக. 21 ஆண்டுகளாக கோமா நிலையில் வாழ்ந்து வருகின்றார்.

சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவ நகரில், வெண்டிலேட்டர் உதவியுடன் 21 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறார். இவரது உடல், இயந்திரங்களின் உதவியுடன் மட்டுமே உயிர் வாழ்கிறது. இவருக்கு உணவுக் குழாய் மூலமே உணவும் வழங்கப்பட்டு வந்தது .

திடீர் மரணம்:-

20 ஆண்டுகளாக கோமாவில் உறங்கும் இவருக்கு, ஒரு நாள் சுயநினைவு திரும்பும் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பம் காத்திருந்த நிலையில் உயிர் பிரிந்த‌து

Give Us Your Feedback