ஆகஸ்டு 1 முதல் கேஸ் சிலிண்டர் லாரிகள் வேலை நிறுத்தம்
அட்மின் மீடியா
0
ஆகஸ்டு 1 முதல் கேஸ் சிலிண்டர் லாரிகள் வேலை நிறுத்தம்
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 12 இடங்களில் உள்ளது.
இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதால் அபராதம் விதிக்கப்படுகிறது.
எனவே தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பிளாண்டுகளில் இருந்து இயங்கும் சிலிண்டர் லாரிகள் வருகிற 1-ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்
இது சம்பந்தமாக பெருந்துறையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாதால் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது
Tags: தமிழக செய்திகள்