திருவள்ளூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை.! நடந்தது என்ன
திருவள்ளூர் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை.!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது மாணவி ஒருவர், நடுரோட்டில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் சனிக்கிழமை அன்று, சிறுமி சாலையில் நடந்து சென்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாயை மூடி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது,
இந்த நிலையில், குற்றவாளியை கைது செய்ய எஸ்பி தலைமையில் 3 டிஎஸ்பி குழுக்களை அமைத்து காவல்துறை இயக்குநர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இந்த தனிப்படைகள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் செயல்படுகின்றன. மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பிக்கள்) – ஜெயஸ்ரீ (கும்மிடிப்பூண்டி), தமிழரசி (திருவள்ளூர்), மற்றும் புகழேந்தி (செங்கல்பட்டு) தலைமையில் இந்த தனிப்படைகள் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதிவானசெல்போன் சிக்னல், வாகன எண்கள் சேகரித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.
Tags: தமிழக செய்திகள்