Breaking News

பீகாரில் விநோதம் பொம்மை என நினைத்து நாகபாம்பை கடித்து கொன்ற 1 வயது குழந்தை நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

பீகாரில் உள்ள பாட்னாவில் உள்ள  பெட்டையா கிராமத்தில் வசித்து வருபவர் மாதேஸ்வரி தேவி. இவருடைய 1 வயது மகன் கோவிந்தா. என்ற ஒரு வயது குழந்தை, தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது, திடீரென ஒரு நாகப்பாம்பு குழந்தையின் அருகே வந்துள்ளது. அப்போது பொம்மை என நினைத்து அந்த குழந்தை பாம்பை கையில் எடுத்து, கடித்து விளையாடி உள்ளது

சென்னையில் பாம்புகளை பிடிக்க உதவி எண் அறிவிப்பு

அதன் பின்னர் கோவிந்தாவும் சுயநினைவற்று விழுந்து விட்டான்  இதனை கண்ட அப்போது அஉடனடியாக கோவிந்தாவை அரசு மருத்துவ கல்லூரிக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் பாம்பு, குழந்தையை கடிக்கவில்லை. அதன் விஷம் எதுவும் குழந்தையின் உடலில் ஏறவில்லை என தெரிவித்தனர். எனினும், கோவிந்தா தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளான். எனினும், குழந்தை கடித்ததில் அந்த பாம்பு உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback