நீங்கள் பத்திரிகையாளராக வேண்டுமா - 1 ஆண்டு டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ postgraduate diploma course at the chennai institute of journalism
சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்வி கழக வளாகத்தில் இதழியல் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சாா்பில் ஓராண்டு இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு அளிக்கப்படுகிறது. ஒரு பருவத்துக்கு ரூ. 5,000 கட்டணம் வீதம் ரூ.10,000 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. postgraduate diploma course at the chennai institute of journalism
சென்னை இதழியல் கல்வி நிறுவனம், தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. ஓராண்டு இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு (PG Diploma in Journalism) வழங்கும் இந்நிறுவனம் 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இதழியல் கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்துவதும் மாணவர்களை மிகச் சிறந்த இதழாளர்களாகவும், கல்வியாளர்களாகவும், கற்றுத்தருபவராகவும் தயார் செய்வதுமே இந்தக் கல்வி நிறுவனத்தின் நோக்கமும் குறிக்கோளும் ஆகும்.
படைப்பாற்றலும், பல்துறை இணைந்த பயிற்சியையும் அளிக்கும் கல்வி முறையைக் கொண்டுள்ளது இந்நிறுவனம். கோட்பாட்டு அறிவுடன் இதழியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை வளர்க்க செய்முறை பயிற்சியையும் வழங்க ஆழ்ந்த கவனம் செலுத்துகிறது.வளர்ந்து வரும் துறைகளான தரவு இதழியல், செயற்கை நுண்ணறிவு, இதழியலுக்கான கருவிகளைக் கையாள கற்றுக் கொடுத்தல் ஆகியவற்றுடன் அரசியல், அரசியல் அமைப்பு சட்டம், வெளி விவகார செயல்பாடுகள், அரசியல் நிலைப்பாடு, அரசியல், பொருளாதாரம் சட்டம் போன்ற அடிப்படை துறைகளிலும் ஒரு அறிமுகத்தை இந்நிறுவனம் வழங்குகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கல்வியை வழங்கும் இந்நிறுவனம், கல்வியை முடித்த மாணவர்கள் நேரடியாக ஊடகத் துறையில் சேர்ந்து பணியாற்றும் திறமையைப் பெற்றிட வழிவகுக்கும்.
மாணவர் சேர்க்கைக்கான தகுதிகள்:
அடிப்படை தகுதி: குறைந்தபட்சம் 50% மதிப்பெண் அல்லது அதற்கு இணையான CGPA-வுடன் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக் கழகத்தில் இள நிலை பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
BC/BCM/MBC/DNC/SC/SCA/ST ஆகியவர்களுக்கு பட்டப் படிப்பில் தேர்ச்சி போதுமானது.
வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் ஆண்டில் ஜூலை 1-ம் தேதியன்று 41 வயதை கடந்திருக்க கூடாது.
இடஒதுக்கீடு:
தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீடு கொள்கையை இந்நிறுவனம் பின்பற்றும்.கல்விக் கட்டணம்:விண்ணப்பத் தொகை ரூ.100கல்விக் கட்டணம் முதல் அரையாண்டிற்கு ரூ.5000 மற்றும் இரண்டாவது கல்வியாண்டிற்கு ரூ.5000 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தேர்வின் முறையில் முதற்கட்டமாக 3 கேள்விகளுக்கு குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் எழுத்துப்பூர்வமான பதில் அளிக்க வேண்டும்.
1. நான் ஏன் ஊடகவியலாளராக விரும்புகிறேன்? (200 வார்த்தைகள்).
2. உங்கள் பார்வையில் தமிழ்நாடு தனித்துவமாய் திகழ்வதற்கு காரணம் என்ன? (500 வார்த்தைகள்).
3. உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு புத்தகம் / ஒரு திரைப்படம் பற்றி எழுதவும் (300 வார்த்தைகள்).
மாணவர்கள் தங்கள் பதிவுகளை ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம். ஆனால் இரண்டு மொழிகளில் கலந்து எழுதக் கூடாது.
விண்ணப்பிக்கும் அனைவரும் தாங்கள் எழுதிய எழுத்துகள் அவர்களாலேயே எழுதப்பட்டன என்றும், வேறு ஒருவரின் எழுத்தையோ அல்லது தொழில்நுட்ப உதவியுடனோ உருவாக்கப்படவில்லை என்ற உறுதி மொழியை அளிக்க வேண்டும்.(படிவம் இணைக்கவும்)
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:-
03/08/2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cij.tn.gov.in/ta/curriculum
Tags: வேலைவாய்ப்பு
