Breaking News

SSC CGL 2025 மத்திய அரசில் 14,582 காலிப்பணியிடங்கள் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 SSC CGL 2025  மத்திய அரசில் 14,582 காலிப்பணியிடங்கள் வேலை வாய்ப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய பணியாளர் தேர்வு வாரியம்  பட்டப்படிப்பு தகுதிக்கான CGL தேர்வு  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 14,582 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் ஜூலை 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு:-

01.08.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். அதிகபடியாக பதவிக்கு ஏற்ப 27 முதல் 32 வரை இருக்கலாம்.

வயது வரம்பில் தளர்வு:-

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி:-

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

04.07.2025

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் :-

05.07.2025

விண்ணப்பம் திருத்தம் செய்ய கால அவகாசம் :-

09.07.2025 முதல் 11.07.2025 வரை

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்;-

https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_cgl_2025.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback