Breaking News

பாஸ்போர்ட்டில் மனைவி பெயர் சேர்க்க இனி திருமண சான்றிதழ் தேவை இல்லை முழு விவரம் இதோ Now add your spouse’s name to your passport with Annexure J

அட்மின் மீடியா
0

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முக்கிய சீர்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

வாழ்க்கைத் துணைவரின் பெயரை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சேர்க்க/நீக்க திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக "இணைப்பு J"எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்ததலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:-

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முக்கிய சீர்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. அதில், வாழ்க்கைத் துணைவரின் பெயரை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்கள் திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக `இணைப்பு ஜே' (Annexure J) எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

அந்த விண்ணப்பத்தில்:-

அஇரு தரப்பினரும் கையொப்பமிட்டு, சுய சான்றளிக்கப்பட்ட புகைப்படத்தை இணைக்க வேண்டும். இருவரின் முழு பெயர், முகவரி, பிறந்த தேதி, திருமண நிலை, ஆதார் எண், வாக்காளர் எண், பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மறுமணத்திற்கு பிறகு, புதிய துணைவரின் பெயரை சேர்க்க, விவாகரத்து ஆணை, மறுமண சான்றிதழ், முன்னாள் துணைவரின் இறப்பு அல்லது மறுமண சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் விபரங்களை, 'https://www.passportindia.gov.in/psp' என்ற இணையதளத்தில் காணலாம்.

Now add your spouse’s name to your passport with Annexure J 

Annexure J acts as a simplified affidavit and includes:

A joint, self-attested photograph of the coupleFull names, addresses, and dates of birth of both spouses

A clear declaration of marital statusA

adhaar number and either a Voter ID or Passport number

Signatures of both individuals with the place and date

This form serves as a legal and acceptable substitute for a marriage certificate, 

helping streamline the passport update process

particularly for women who often face name mismatches or documentation gaps after marriage.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback