Breaking News

MBBS, BDS படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

MBBS, BDS படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நீட்இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்கூட்டியே இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதமாவதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய முடியாதோ என்ற கவலை தேவை இல்லை. வழக்கமாக மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமை அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் சரிபார்க்கப்படும். 

அதேபோன்று தற்போதும் மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் நீட் தேர்வின் வரிசை எண் மற்றும் நுழைவுச்சீட்டு அடிப்படையில் மதிப்பெண்கள் பெறப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்ப்பிதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். அந்த கால அவகாசம் 5 நாட்கள் வரை இருக்கும்.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback