கணவர் சம்மதம் இல்லாமல் முஸ்லீம் மனைவி விவாகரத்து (khula) செய்ய முடியும் குரானை மேற்கோள் காட்டி தெலுங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தெலுங்கானா உயர் நீதிமன்றம், ஷரியா சட்டத்தின் கீழ், ஒரு முஸ்லிம் பெண் தனது கணவரின் ஒப்புதல் இல்லாமல் குலா மூலம் தனது திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முழு உரிமையும் உள்ளது என்று தீர்ப்பளித்தது.
விவாகரத்தை செல்லுபடியாக்க முஃப்தி அல்லது இஸ்லாமிய அதிகாரியிடமிருந்து சான்றிதழ் ( குலா ) பெற வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
குலா மூலம் விவாகரத்து பெற கணவரின் அனுமதி தேவை இல்லை தெலுங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
குலா நடைமுறை என்றால் என்ன:-
மனைவியுடன் சேர்ந்து வாழ கணவன் விரும்பாவிட்டால் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு தலாக் என்று கூறப்படும்.
கனவனுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு விருப்பம் இல்லாவிட்டால் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதற்கு குலா என்று கூறப்படும்.
விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.
ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் ஜமாத் தலைவரிடம் முறையிட வேண்டும். கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டியதில்லை. அந்தத் தலைவர், கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் அப்பெண்ணைத் திரும்பக் கொடுக்குமாறு கூறுவார்
அந்த மகர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறு கணவனுக்கு கட்டளையிடப்படும். மகர் தொகையை கணவனுக்கு திருப்பி கொடுத்த பிறகே அப்பெண்ணுக்கு திருமண முறிவு உத்தரவு கிடைக்கும்.
குலா செய்தது தவறு எனப் பின்னர் அறிந்த பெண், மீண்டும் அதே கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால், அந்தக் கணவனும் சம்மதித்தால் இருவரும் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.
இஸ்லாமியப்பெண் தன் விருப்பப்படி விவாகரத்து செய்ய குலா மட்டுமே சட்டப்பூர்வமான வழி , இஸ்லாமியப்பெண்கள் அதன் மூலம் விவாகரத்து பெற நீதிமன்றத்தில் வழக்கு போட்டு விவாகரத்து வாங்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடவேண்டியதில்லை என தீர்பளித்தார்கள்
Muslim women have absolute right to divorce through Khula
Kerala High Court Islamic law recognises Khula
Muslim woman's right to demand divorce
husband's consent not needed Khula absolute
absolute right to divorce through Khula
Tags: இந்திய செய்திகள்