Breaking News

IRCTC கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி How To Link Aadhaar With Your IRCTC Account

அட்மின் மீடியா
0

 IRCTC கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி How To Link Aadhaar With Your IRCTC Account



நாட்டிற்குள் தங்கள் பயணங்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய  IRCTC பயன்படுத்தப்படுகிறது

தற்போது, ​​வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் 6 மின்-டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம். இருப்பினும், பயனர்கள் தங்கள் ஆதார் எண்களை தங்கள் IRCTC கணக்குகளுடன் இணைத்து, டிக்கெட்டில் பயணிக்கும் மற்றொரு பயணியின் ஆதாரை சரிபார்த்திருந்தால், அவர்கள் ஒரு மாதத்தில் 12 மின்-டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம். 

தட்கல் டிக்கெட்:-

தட்கல் டிக்கெட் எடுக்க ஆதார் பதி செய்து இருப்பது காட்டாயமாக்கப்பட்டுள்ளது

விரைவு ரயிலில் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் மூலம் ஓடிபி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது

விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய தற்போது 60 நாள்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

மேலும் பயணம் செய்யும் நாளுக்கு ஒருநாள் முன்னதாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.

தட்கல் டிக்கெட் என்றால், ஒரு விரைவு ரயிலில் பயணம் செய்ய, அந்த விரைவு ரயில் புறப்படும் நாளுக்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கு ஏசி பெட்டிகளுக்கான முன்பதிவும், காலை 11 மணிக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கும் முன்பதிவு தொடங்கும்.

தட்கல் டிக்கெட் முன்பதிவு இருக்கும் முறைகேடுகளைத் தடுகக் சிலக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் ஐஆர்சிடிசி கணக்குடன் பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பது. அதன் மூலம், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ஆதார் அட்டையில் இருக்கும் செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்பட்டு, அதனை உள்ளிட்டால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். 

இந்த நடைமுறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.எனவே, ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆதார் சரிபார்ப்பு (aadhaar verification) செய்யப்பட்டவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

 IRCTC கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி

IRCTC கணக்குடன் ஆதாரை இணைக்க நீங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய இயலாது பதிலாக அதிகாரப்பூர்வ ரயில்வே ஆப்பில் நீங்கள் இணைக்கலாம்



படி 1:-

உங்கள் மொபைலில் ப்ளேஸ்டோர் சென்று  https://play.google.com/store/apps/details?id=cris.org.in.prs.ima&hl=en_IN    IRCTC  யின் அதிகாரப்பூர்வ ரயில்வே ஆப்பான ரயில் கனெக்ட் ஆப் டவுன்லோடு செய்யவும்:-

அடுத்து அதில் உங்கள் பயனர் ஐடி மற்றும் பாஸ்வேரு உள்ளிட்டு உள் நுழையவும்

அடுத்து அதில் Account என்பதை கிளிக் செய்து அதில் My Profile என்பதை கிளிக் செய்யவும்

அதில் உங்கள் பயனர் ஜடி பெயருக்கு கீழ் உள்ள உங்கள் பெயர் ஆதாரில் உள்ளது போல் உள்ளதா என்பதை சரிபார்க்கவும் 

அடுத்து ஆதாரில் உள்ளது போல் பிறந்த தேதி, மாதம் வருடம் உள்ளதா என்பதை சரி பார்க்கவும்

தவறாக இருந்தால் EDIT என்பதை கிளிக் செய்து ஆதாரில் உள்ளது போல் சரி செய்து சப்மிட் கொடுக்கவும்.

படி 2:-

அடுத்து Account என்பதை கிளிக் செய்து அதில் Authenticate user என்பதை கிளிக் செய்யவும்  

அடுத்து அதில் அதில் உங்கள் பெயர் ஆதாரில் உள்ளது போல் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்

அடுத்து அதன் கீழ் உங்கள் ஆதார் நம்பரை பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும்

அடுத்து ஆதாரில் பதிவு செய்யபப்ட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபியை சரியாக பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும் அவ்வளவுதான்

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback