Breaking News

கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு அதிர்ச்சி வீடியோ colombian presidential candidate miguel uribe shot during campaign

அட்மின் மீடியா
0

கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு அதிர்ச்சி வீடியோ colombian presidential candidate miguel uribe shot during campaign


கொலம்பியா  அதிபர் தேர்தலில் போட்டியிடும் மிகுவெல் உரிப் miguel uribe வேட்பாளர்  பிரச்சாரத்தில் போகோட்டா பகுதியில் மக்களிடம் ஓட்டுகேட்கும் போது அவரது தலையில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  துப்பாக்கியால் சுட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது

கொலம்பியா  அதிபர் தேர்தலில் போட்டியிடும் மிகுவெல் உரிப்  வேட்பாளர்  பிரச்சாரத்தில் போகோட்டா பகுதியில் மக்களிடம் ஓட்டுகேட்கும் போது அவரது தலையில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  துப்பாக்கியால் சுட்ட வீடியோ

அமெரிக்க நாடான கொலம்பியா அதிபராக குஸ்தாவ் பெத்ரோ செயல்பட்டு வரும் நிலையில், அவரது ஆட்சி காலம் முடிவடைய உள்ளதால் கொலம்பியாவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிபர் பதவிக்காக மிகுவெல் உரிப் என்பவரும் போட்டியிட்டு வருகிறார்

கொலம்பியாவின் பல்வேறு மாகாணங்களிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மிகுவெல் உரிப் நேற்று போகோட்டாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் மிகுவெல் உரிப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் உரிப்பிற்கு தலையில் 2 பகுதிகளில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸார் கைது செய்த நிலையில் அது ஒரு மைனர் சிறுவன் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த சம்பவம் கொலம்பியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ பார்க்க  இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1931935972243193947

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback