Breaking News

இன்று முதல் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை - கனரா வங்கி அறிவிப்பு Canara Bank minimum balance

அட்மின் மீடியா
0

இனி வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை - கனரா வங்கி அறிவிப்பு



பொதுத்துறை வங்கியான கனரா, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது இன்று (ஜூன் 1) முதல் இது நடைமுறைக்கு வருவதாக கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வங்கிகளிலும் ஒவ்வொரு வங்கிக்கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டியது கட்டாயம். அப்படி இல்லாவிட்டால், அதற்கு என தனி அபராதம் விதிக்கப்படும். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியை பொறுத்தவரை,

நகரம் மற்றும் மெட்ரோ நகரங்களில் உள்ள கிளைகளில் 2 ஆயிரம் ரூபாயும்,

சிறிய நகரங்களில் உள்ள கிளைகளில் ரூ.1,000  ரூபாயும்,

கிராம பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளில் 500  ரூபாய், என குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டும்.

குறைந்த பட்ச இருப்பு தொகை இல்லாத வங்கி கணக்குகளில்  ரூ.25 முதல் ரூ.45 வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அனைத்து சராசரி மாதாந்திர இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறையை கனரா வங்கி ரத்து செய்துள்ளது. 

இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எந்த அபராதமும் இல்லாமல் வங்கிக்கணக்குகளை பணமின்றி பராமரிக்க முடியும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கனரா வங்கி கூறியுள்ளது.

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback