கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகனை தாக்குதல் வைரலாகும் வீடியோ
அட்மின் மீடியா
0
சிரியா கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகனை தாக்குதல் வைரலாகும் வீடியோ
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய சமீபத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, சிரியா கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்.
அமெரிக்காவிற்கு எதிரான 'ஆபரேஷன் பஷாரத் அல்-ஃபாத்' (வெற்றியின் நல்ல செய்தி) நடவடிக்கையை தொடங்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவிப்பு
சிரியா ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை நோக்கி ஈரான் 6 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஈரான் தாக்குதலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தார் நாடு தனது வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவிப்பு.
மேலும் மறு அறிவிப்பு வரும் வரை இங்கிலாந்து நாட்டவர்கள் மறைவிடங்களிஸ் தஞ்சம் அடையுமாறு கத்தாரில் உள்ள இங்கிலாந்து தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரான் தாக்குதல் முன்னெச்சரிக்கையாக, ஆபத்து நீங்கும் வரை பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு பக்ரைன் அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்.
இன்று ஏவப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்திய குண்டுகளின் எண்ணிக்கைக்குச் சமமாகும்
இந்த நடவடிக்கை நமது நட்பு மற்றும் சகோதர நாடான கத்தார் மற்றும் அதன் மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என ஈரான் தெரிவித்துள்ளது.
கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரானின் தாக்குதல் எதிரொலியாக, கத்தாரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வீட்டிலேயே இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுவதாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு
ஏவுகணைத் தாக்குதலால் கத்தார் தலைநகர் தோஹாவில் அலறிஅடித்து ஓடிய மக்கள்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-
https://x.com/adminmedia1/status/1937226056534225248
Tags: வெளிநாட்டு செய்திகள்