Breaking News

தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முக்கியமான பதவி கொடுத்த விஜய்

அட்மின் மீடியா
0

ததமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி..  முக்கியமான பதவி கொடுத்த விஜய்




முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியில் இணைந்துள்ள நிலையில் அவர் மாநில கொள்கைப் பரப்புப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிகாரில் வருமான வரித்துறையில் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த அவர், சமீபத்தில் விருப்ப ஓய்வு கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து, மத்திய அரசு அவரை அதிகாரபூர்வமாக பணி விலக அனுமதித்தது.

அதையடுத்து, சென்னையின் பனையூரில் அமைந்த தவெக அலுவலகத்தில், கட்சித் தலைவர் விஜய்யின் முன்னிலையில், அருண்ராஜ் திங்கள்கிழமை நேரில் சென்று கட்சியில் இணைந்தார். 

இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் திரு. டாக்டர் K.G. அருண்ராஜ் Ex IRS. அவர்கள், கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propaganda & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.

இவர். எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி, கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் புதிதாக இணைந்தவர்கள் பற்றிய விவரம்:-

1. திருமதி R. ராஜலட்சுமி B.Com., B.L.. M.B.A. அவர்கள் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

2. திரு. S. டேவிட் செல்வன் B.Com. அவர்கள் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்

3. . L A. 5 M.B.B.S., D.A., Ph.D., SRF. திராவிட முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனர். முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

4. திரு. டாக்டர் N. மரிய வில்சன் B.Tech., M.B.A.. P.hd. அவர்கள் நிர்வாக அறங்காவலர். ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை. தலைவர், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி

5. . . ώς B.A.L., LLB., LLM (IND).. LLM (UK).. PGDPM & IR.. JAIIB. முன்னாள் நீதிபதி. தமிழ்நாடு மாநில ஜூடிசியல் சர்வீஸ். சென்னை

கழகத்தில் புதிதாக இணைந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இவர்களுக்கும் கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback