Breaking News

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய ஐ டி பெண் ஊழியர் கைது - வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய ஐ டி பெண் ஊழியர் வைரல் வீடியோ

தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கொண்டக்கல் ரயில்வே கேட் -- சங்கர்பள்ளி இடையே ஹைதராபாத் நோக்கி ரயில் தண்டவாளத்தில், ஒரு பெண் நேற்று அதிகாலை காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றார். தண்டவாளத்தில் கார் செல்வதைக் கண்டு செய்வதறியாது திகைத்த ரயில்வே அதிகாரிகள், அந்த வழித்தடத்தில் வந்த 15 ரயில் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை அளித்து ரயில்களை நிறுத்தினர். 

அதன்பின் பொது மக்களுடன் ரயில்வே ஊழியர்கள் இணைந்து காரை நிறுத்தி, அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இருந்து ரவிகா சோனி என்ற பெண்ணை வெளியே அழைத்து வந்தனர். 

விசாரனையில் அவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஹைதரபாத்தில் ஒரு சாஃப்ட் வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தகவல் அறிந்த சங்கரபல்லி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த பெண்ணை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback