Breaking News

ஆந்திராவில் கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம், நாராயணபுரம் கிராமத்தில் கணவன் வாங்கிய ரூ 80 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாததற்ககாக அவருடைய மனைவியை கடன் கொடுத்தவர்கள் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு அடித்து துன்புறுத்தியுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது




ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாராயணபுரம் என்ற கிராமம் உள்ளது., இங்கு வசித்து வரும் தம்பதி திம்மராயப்பன் - சிரிஷா... இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.. அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.

திம்மராயப்பன் அந்த பகுதியை சேர்ந்த முனிகண்ணப்பா என்பவரிடம் வட்டிக்கு ரூ. 80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய கடனை அடைக்க முடியாததால், தனது மனைவி சிரிஷா மற்றும் மகனை அழைத்துக் கொண்டு பக்கத்து கிராமத்திற்கு குடியேறியுள்ளார். 

இந்நிலையில் தன்னுடைய மகனின் பள்ளி சான்றிதழை வாங்குவதற்காக சிரிஷா இன்று நாராயணபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார்

தகவல் அறிந்து முனிகண்ணப்பா கூட்டாளிகளுடன் சிரிஷாவிடம் கணவன் வாங்கிய ரூ.80 ஆயிரம் பணத்தை உடனே வட்டியுடன் எடுத்து வைக்க வேண்டும் என்று மிரட்டி அங்கிருந்த மாமரத்தில் சிரிஷாவை கட்டிவைத்து தாக்கியிருக்கிறார்.

இதைப்பார்த்த சிலர் தங்களது செல்போன்களில் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட அந்த வீடியோ வைரலாகிவிட்டது.

வீடியோவை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்து சிரிஷாவை விரைந்து சென்று மீட்டனர். மேலும், முனிகண்ணப்பா மற்றும் கூட்டாளிகளை அதிரடியாக கைது செய்தனர்.. 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு செல்போனில் பேசி, சம்பவம் குறித்து முழு விவரங்களைக் கேட்டறிந்தார்

சிரிஷாவின் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று கேட்டரிந்து அந்த பெண்ணின் 3 குழந்தைகளின் படிப்பு செலவு அரசு ஏற்பதாகவும் மேலும் அரசு அவர்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவளிக்கும் என்றும்.அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறினார்.மேலும் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்குவதாக செல்போனில் உறுதி அளித்தார். 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1935020444576596117

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback