சென்னை அண்ணா நகரில் செப்டம்பர் முதல் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் கட்டணம் முழு விவரம் இதோ
செப்டம்பர் மாதம் முதல் சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம்
ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வாகனத்திற்கு ரூ.60, கார்களுக்கு ரூ. 40 இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20 பார்க்கிங் கட்டணமாக நிர்ணயம்
சென்னை அண்ணா நகரில் செப்டம்பர் முதல்... 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டம்
அண்ணா நகரின் முக்கிய சாலைகள் மட்டுமின்றி, குடியிருப்புச் சாலைகளும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தில் இணைப்பு
அண்ணா நகரில் வீடுகளில் பார்க்கிங் இல்லாத கார் உரிமையாளர்கள் வீட்டின் முன் சாலையில் காரை நிறுத்தவும் கட்டணம் அவசியம்
செல்போன் செயலி மூலம் முன்கூட்டியே பார்க்கிங் இடங்களை முன்பதிவு செய்யலாம்
யுபிஐ, ரொக்கப் பரிவர்த்தனை முறைகளில் கட்டணம் செலுத்தலாம்
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் நேற்றைய தினம் அண்ணாநகரில் நகரின் முதல் ஸ்மார்ட் பார்க்கிங் செயல்படுத்தும் திட்டம் குறித்து பொது கூட்டம் ஒன்றை நடத்தியது.
இந்தக் கூட்டத்தில் CUMTA, GCC மற்றும் கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல்துறை உட்பட பிற துறைகளும் கலந்து கொண்டனர்.
ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம் செப்டம்பர் மாதம் முதல் சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வாகனத்திற்கு ரூ.60, கார்களுக்கு ரூ. 40 இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 பார்க்கிங் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா நகரின் முக்கிய சாலைகள் மட்டுமின்றி, குடியிருப்புச் சாலைகளும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தில் இணைக்கப்படுகிறது. அண்ணா நகரில் வீடுகளில் பார்க்கிங் இல்லாத கார் உரிமையாளர்கள் வீட்டின் முன் சாலையில் காரை நிறுத்தவும் கட்டணம் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலி மூலம் முன்கூட்டியே பார்க்கிங் இடங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். யுபிஐ, ரொக்கப் பரிவர்த்தனை முறைகளில் கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது.
Tags: தமிழக செய்திகள்