Breaking News

நம்ம ஊரு ஃபிளைட்டுனு ஜிகர்தண்டா, பருத்திபால் கேட்டுறாதீங்க.. பயணிகளிடம் ஜாலியாக பேசிய பைலட்

அட்மின் மீடியா
0

மதுரையிலிருந்து அபுதாபிக்கு இயக்கப்பட்ட முதல் விமானத்தை இயக்கிய மதுரையைச் சேர்ந்த விமானி இமானுவேல் நம்ம ஊரு ஃபிளைட்டுன்னு ஜிகர்தண்டா, பருத்திபால் கேட்டுறாதீங்க.. பயணிகளிடம் ஜாலியாக பேசிய பைலட்



மதுரையில் இருந்து அபுதாபிக்கு முதன்முறையாக விமான சேவை தொடங்கிய நிலையில், பயணிகள் மத்தியில் விமானி செம ஜாலியாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரையில் இருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமான சேவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த விமானம்,அபுதாபியில் இருந்து பகல் 11:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். பின்னர், மறுமுனையில், மதுரையில் இருந்து மீண்டும் 2:35 மணிக்கு அபுதாபிக்கு புறப்பட்டுச் செல்லும்.

இந்நிலையில், நேற்று முதன்முறையாக இண்டிகோ நிறுவனம் விமான சேவை தொடங்கிய நிலையில், மதுரையைச் சேர்ந்த விமானி, பயணிகளிடம் மைக் மூலமாக பேசினார். அவர், "மதுரையில் இருந்து அபுதாபிக்கு 4 மணி நேரத்தில் விமானம் சென்றுவிடும். பயண தொலைவு சுமார் 3000 கிலோ மீட்டர். பயணத்தை என்ஜாய் பண்ணுங்க. அதுக்குனு நம்ம ஊர் flight தானே என ஜிகர்தண்டா, பருத்திப்பால் வேணும்னு கேட்டுறாதீங்க. அதெல்லாம் இங்க கிடைக்காது" என ஜாலியாக கலாய்த்தார். விமானியின் பேச்சு, பயணிகளிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1933915932856111256

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback