Breaking News

ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு - முடிவுக்கு வருகிறதா தந்தை-மகன் மோதல் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு - முடிவுக்கு வருகிறதா தந்தை-மகன் மோதல் முழு விவரம்



பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதல் கடந்த சில வாரங்களாக பெரியளவில் வெடித்தது. 

அன்புமணியை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களாக அறியப்படும் பாமக நிர்வாகிகளையும் அந்த பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டு வருகிறார். இது மட்டுமல்லாமல் அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

அதன்பின்பு அன்புமணி ராமதாஸ் பொதுக்குழு தான் என்னை நியமித்தது. என் பதவியை நீக்க பொதுக்குழுவுக்கு தான் அதிகாரம் இருக்கிறது, வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று பேசினார். 

மேலும் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்டு ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில் அன்புமணி இன்று சென்னையிலிருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு தனது தந்தை ராமதாஸை சந்திக்க சென்றார்.சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதன் பின்னர் அன்புமணி மீண்டும் கிளம்பி சென்னை சென்றார்.

Give Us Your Feedback