விமானம் கீழே விழுந்தவுடன் கீழே குதித்து உயிர் தப்பிய புதிய வீடியோ வெளியானது
விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபர் - உயிர்தப்பியது எப்படி முழு விவரம் இதோ
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் மோதி வெடித்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 274 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தின் 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த விஸ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் உயிர் பிழைத்திருந்தார்
தற்போது வெளியாகி உள்ள விடியோவில் அகமதாபாத்தில் உள்ள பி.ஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் விமானம் மோதிய பிறகு, தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. அங்கு இருந்த மக்கள் இதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரேயொரு நபர் மட்டும், விடுதியின் மெயின் கேட் வழியாக செல்போனை கையில் எடுத்துக்கொண்டு வந்தார். இவரை உடனடியாக மக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உயிர்பிழைப்பு:-
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாக முதலில் சொல்லப்பட்ட நிலையில், ஒரே ஒரு பயணி உயிர் பிழைத்து இருப்பதாக வெளியான தகவல் அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்தது
விமானம் புறப்பட்ட உடனேயே கீழே இறங்கத் தொடங்கியதாகவும், இதனால் ரமேஷ் விஸ்வக்குமார் சீட் பெல்ட்டை கழற்றிய அவர், விமானம் தரையில் அருகே வந்த போது சரியான நேரத்தில் சுதாரித்து திடீரென இரண்டாகப் பிளந்த விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அங்கிருந்து குதித்துள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1934609287596417226
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ