கூகுள் பே , போன் பே மூலம் பேலன்ஸ் தொகை பார்க்க கட்டுப்பாடு முழு விபரம்

அட்மின் மீடியா
0

கூகுள் பே , போன் பே மூலம் பேலன்ஸ்  தொகை பார்க்க கட்டுப்பாடு முழு விபரம்

UPI செயலி மூலம் வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையை சரிபார்க்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதன்படி இதுவரை கூகுள் பே, ஃபோன்பே போன்ற யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைக்கான நேரம் 30 வினாடியில் இருந்து 15 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும், பரிவர்த்தனை தோல்வியடைந்தால் பணம் கழிக்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளும் நேரமும் 30 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாக் குறைக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், வங்கிக் கணக்கின் இருப்புத் தொகையை யுபிஐ செயலிகள் மூலம் இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பார்க்க முடியும் என்றும், நெட்வொர்க்கில் தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதை தவிர்க்கவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக NPCI தெரிவித்துள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback