Breaking News

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் என ட்ரம்ப் அறிவிப்பு - போர் நிறுத்தம் இல்லை என ஈரான் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் என ட்ரம்ப் அறிவிப்பு -  போர் நிறுத்தம் இல்லை என ஈரான் அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது ஈரான்

ஈரான் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே இரு வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நீடித்து வருகிறது. 

இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் அளிக்காது ஈரான் அறிவித்தது. 

இதனைத் தொடர்ந்து ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போர் நிறுத்தம் டிரம்ப் அறிவிப்பு:-

ஈரான் - இஸ்ரேல் இடையே 24 மணி நேரத்தில் முழுமையான போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

12 நாட்கள் நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்த இருநாடுகளின் தைரியத்தை பாராட்டுகிறேன். போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல், ஈரானுக்கு வாழ்த்துகள்

இந்தப் போர், பல ஆண்டுகளாக நடந்து மத்திய கிழக்கையே அழித்திருக்க வேண்டிய ஒரு போராக அமைந்திருக்கும். அவ்வாறு நடக்கவில்லை; அது ஒருபோதும் நடக்காது. இஸ்ரேல், ஈரானை கடவுள் ஆசிர்வதிப்பார்; மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவையும் கடவுள் ஆசிர்வதிப்பார். உலகை கடவுள் ஆசிர்வதிப்பார்.

இஸ்ரேலும் ஈரானும் அமைதியை நிலைநாட்ட தன்னை அணுகியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் எதிர்காலத்தில் அன்பு, அமைதி மற்றும் செழிப்பைக் காணும் என தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் இல்லை - ஈரான்

ஈரான்-இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்தம் 24 மணி நேரத்தில் அமலுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த நிலையில், இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வரவில்லை என ஈரான் அறிவிப்பு!

இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது. இப்போதைக்கு போர் நிறுத்தம், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த ஒப்பந்தம் இல்லை என ஈரான் அறிவிப்பு!

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback