Breaking News

பென்ஷன்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை உயர்வு... தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

அட்மின் மீடியா
0

பென்ஷன்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை உயர்வு... தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

தமிழக சட்டபேரவையில் ஏப்ரல் 28ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். 

இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து அரசாணைகள் வெளியிடப்பட்டு வருகிறது.

முதியோர் பென்ஷன்இதன்படி இதன்படி, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ500லிருந்து ரூ1000ஆக உயர்த்தி வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உயர்வால் சுமார் 4,71,000 ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். இதனால் அரசிற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் சுமார் 24 கோடி ரூபாயாக இருக்கும்.

மேலும்,ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடி மகிழும் வகையில் பண்டிகை கால முன்பணம், ரூ4000லிருந்து ரூ6000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உயர்வால், சுமார் ரூ52000 ஓய்வூதியதாரர்கள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback