தமிழக வெற்றி கழகத்தின் விருப்பச் சின்னமாக ஆட்டோ - முழு விவரம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் தேர்தல் சின்னத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் வழங்கப்பட்ட சின்னங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொருத்தமான சின்னம் எது என அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மக்களிடையே கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளின் விருப்பமாக ஆட்டோ சின்னம் தெருவாகி உள்ளது வரும் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து தேர்தல் ஆணையத்தில் மூன்று சின்னங்களை தேர்வு செய்து பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விருப்பச் சின்னமாக ஆட்டோவை ஒதுக்க தமிழக வெற்றிக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
மேலும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நவம்பர் மாதம் ஆட்டோ சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கட்சி தொடங்குவதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பல இடங்களில் ஆட்டோ சின்னத்தை விருப்பமாக கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்