விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் வைரல் வீடியோ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் ஆபாச நடனமாடும் அர்ச்சகர்கள் வைரல் வீடியோ
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவியாளர்களாக பணியாற்றும் பூசாரிகள், மது போதையில் ஆபாச நடனமாடும் காட்சிகளும், பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறி செயல்படும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 3 அர்ச்சகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் மதுபோதையில் 3 பேரும் சினிமா பாடலுக்கு ஆபாச நடனம் ஆடியது மற்றும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மீது விபூதி அடித்த வீடியோ வெளியான நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் (30), கும்பாபிஷேக பணிக்கு வந்துள்ள அர்ச்சகர்களுடன் சேர்ந்து வீட்டில் ஆடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/sureshkalipandi/status/1937918952027640224
Tags: இந்திய செய்திகள்