ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி தொண்டர் பலியான நெஞ்சை பதைக்க வைக்கும் வீடியோ..
ஜெகன்மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி தொண்டர் பலியான நெஞ்சை பதைக்க வைக்கும் வீடியோ..
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி , பல்நாடு மாவட்டம் ரெண்டபல்லா கிராமத்தில் கட்சி நிர்வாகி ஒருவரது வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். துக்க வீட்டில் ஆறுதல் கூறிவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார்.
கார் குண்டூர் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது , அவரைக்காண ஏராளமாண கட்சித் தொண்டர்கள் கூடிவிட்டனர்
அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டரான செல்லி சிங்கையா (வயது 55) என்பவர், ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்க சென்றுள்ளார்.
அப்போது ஜெகன்மோகன் ரெட்டியை பார்க்க தொண்டர்கள் முண்டியடித்தனர். சிலர் அவரது கார் மீது ஏறிய நிலையில், செல்லி சிங்கையாவும் காரின் மீது ஏற முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கால் தவறி செல்லி சிங்கையா கீழே விழுந்துவிடவே, அதனை ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டிரைவரும் கவனிக்கவில்லை.
தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே டிரைவர் காரை முன்னோக்கி நகர்த்தினார். இதில் காரின் சக்கரம் செல்லி சிங்கையாவின் தலையின் மீது ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கியது.
இதையடுத்து உடனடியாக அங்குவந்த போலீசார் மற்றும் தொண்டர்கள் செல்லி சிங்கையாவை மீட்டு அருகே உள்ள குண்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
ஜெகன்மோகன் ரெட்டியின் காரில் சிக்கி செல்லி சிங்கையா உடல்நசுங்கி உயிரிழந்த வீடியோ காண்போரை கலங்கச் செய்கிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் ஜெகன் மோகன் உதவியாளர் நாகேஸ்வர் ரெட்டி, முன்னாள் எம்.பி சுப்பா ரெட்டி, முன்னாள் அமைச்சர் விடதலா ரஜினி, முன்னாள் எம்.எல்.ஏ பேர்னி நானி ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர் மேலும் கார் ஓட்டுநர் ரமண ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1936964577276940672
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ